சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை பெறுவது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விண்ணப்பங்கள்
சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பரீட்சார்த்திகள் எந்தக் காரணம் கொண்டும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரடியாக வருகை தர வேண்டிய அவசியமில்லை.
பரீட்சார்த்திகள் தமது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காக திணைக்களத்திற்கு வருவதைத் தவிர்த்து, https://certificate.doenets.lk/certificate எனும் இணையதள முகவரி ஊடாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையவழி முறைமையின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் சான்றிதழ்கள் அஞ்சல் சேவை மூலம் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும்.