இலங்கை வரும் விமானங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு; விமானிகள் எச்சரிக்கை
இலங்கை வரும் விமானங்கள் முழு அளவிலான எரி பொருட்களோடு தான் வர வேண்டும் என விமான சேவை திணைக்களம் பல விமான சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவ்வாறு செய்வதானால் அதில் பெரும் ஆபத்து அடங்கி உள்ளதாக, விமானிகள் தெரிவித்துள்ளார்கள். ஏனெனில் பொதுவாக விமானம் ஒன்று தரை இறங்கும் வேளையில் தான் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணத்தால் ஒரு விமானம் தரை இறங்கும் வேளையில், அதில் உள்ள பெற்றோல் டேங்கில் மிக குறைவான அளவு பெற்றோல் இருப்பதே நல்லது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அப்படி இருந்தால் தான் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தீ பற்றி எரிந்தாலும் இலகுவாக அணைக்க முடியும். ஆனால் பெரும் தொகையான பெற்றோலை, வைத்துக் கொண்டு தரை இறங்குவது என்பது பெரும் ஆபத்தான விடையம் என்று விமானிகள் உடனடியாக இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதனை அடுத்து இலங்கை செல்லும் சர்வதேச விமானங்கள் அனைத்தும், கொழும்பில் தரை இறங்கிய பின்னர் இந்தியா சென்று பெற்றோலை நிரப்பிய பின்னர் மீண்டும் கட்ட நாயக்க வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் இலங்கை செல்ல இனி டிக்கெட் விலை பன் மடங்காக உயர உள்ளது.
எனவே இலங்கை செல்ல இருக்கும், உல்லாசப் பயணிகள் அதற்கு மாற்றாக வேறு நாடுகளுக்கு தான் செல்வார்கள். இலங்கைக்கு தற்போது வருமானம் ஈட்டி வரும் உல்லாச துறையும் முடங்கும் அபாயநிலை
அதேசமயம் பூளூம் பேர்க் செய்தியின் படி, இலங்கையிடம் விமானத்திற்கான எரி பொருள் எதுவும் இன்று முதல் கையிருப்பில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.