வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (13-04-2023) நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன் வெளியிட்டப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சூரிய ஒளி அமைப்புகள், தொலைபேசிகள் மற்றும் பாகங்கள், தளபாடங்கள், துப்புரவு முகவர்கள், காலணிகள், எழுதுபொருட்கள், சமையலறை பாத்திரங்கள் மற்றும் பாகங்கள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள் மற்றும் ஆயத்த ஆடைகளை விற்கும் அனைத்து நேரடி விற்பனையாளர்களும் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது..

