புதிதாக இந்தியாவிற்கு கொடுக்க ஒன்றும் இல்லை: உதய கம்மன்பில
இந்தியாவிற்கு புதிதாக திருகோணமலை எண்ணெய் குதங்களை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எம்மிடமிருந்த நூறு எண்ணெய்க்குதங்களையும் இந்தியாவிற்கு எற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் கொடுக்கப்பட்ட எண்ணெய் குதங்களை எமது வசப்படுத்தும் போராட்டத்தையே நான் முன்னெடுத்து வருகின்றேன் என வலுசக்தி அமைச்சர் உதயகம்பன்பில சபையில் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே வலுசக்தி அமைச்சர் உதயகம்பன்பில கூறினார்.
பாராளுமன்றத்தில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் என்னை சந்திப்பதற்காக அழைப்பு விடுக்கவும் இல்லை. அவ்வாறு அவரை சந்திக்க வேண்டிய தேவையும் எனக்கு ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை குத்தகைக்கு அல்ல, நிரந்தரமாகவே இந்தியாவிற்கு எண்ணெய்க்குதங்களை நாம் கொடுத்துவிட்டோம். மேலும் இது ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாகவும், இந்திய பிரமராக ராஜீவ்காந்தி இருந்தபோதே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவிற்கு நாம் கொடுக்க புதிதாக ஒன்றும் இல்லை. இனி கொடுத்தவற்றை எவ்வாறு மீட்டொடுப்போம் என போராடிக்கொண்டுள்ளேன். இதேவேளை இதற்கு எதிராக என்னை விமர்சிக்கும் நபர்கள் இந்திய உடன்படிக்கையை முன்னெடுத்து வருகின்றனர் என்பதே அர்த்தமாகும்.
மேலும் இந்த உடன்படிக்கை 35 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும். அதற்கு பின்னரும் இந்தியாவின் வசமே திருகோணமலை எண்ணெய் குதங்கள் இருக்கும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.