அமைச்சராக பணியாற்ற தயாராக இல்லை; சுசில் பிரேம்ஜயந்த
அழுத்தங்களுக்கு உட்பட்டு அமைச்சராக பணியாற்றுவதற்கு தயாராக இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் தனது அமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்கவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உயர்தர வினாத்தாள்கள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
உயர்தரப் பெறுபேறுகளின் நெருக்கடி தொடர்பில், சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் கலந்துரையாடி அமைச்சரவைப் பத்திரம் கூட சமர்ப்பித்துள்ளதாகவும், தன்னால் இயன்றளவு பணிகளைச் செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இதன்போது உத்தரபாத்திர பரிசோதகர்களுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு தாம் அனுமதியளித்ததாகவும், ஆனால் திறைசேரி அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை எனவும், இந்த விடயத்தில் திறைசேரி நெகிழ்வாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.