திருமணமாகவில்லையா? இனி வேலை இல்லை – சீன நிறுவனத்தில் புதிய விதி
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனம், செப்டம்பர் மாத இறுதிக்குள் ஊழியர்கள் திருமணமாகாமல் இருந்தால் அல்லது விவாகரத்து பெற்றிருந்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
South China Morning Post இல் வெளியான ஒரு அறிக்கையின்படி, Shandong Shuntian Chemical Group Co. Ltd, நிறுவனம், அதன் சுமார் 1,200 ஊழியர்களுக்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய விதி
அதன்படி, விவாகரத்து பெற்றவர்கள் உட்பட 28-58 வயதுக்குட்பட்ட ஒற்றை ஊழியர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் திருமணம் செய்து கொண்டு குடியேற வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இல்லையெனில், அவர்கள் ஒரு சுயவிமர்சனக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் மாத இறுதிக்குள் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிறுவனம் அவர்களை மதிப்பீடு செய்யும். இருப்பினும், செப்டம்பர் இறுதிக்குள் அவர்கள் தனிமையில் இருந்தால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.