புனித கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்தவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்!
இமயமலையில் இருந்து வங்காள விரிகுடா வரை வட இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கங்கை ஆறு 2,700 கி.மீ பாய்கிறது என்று கூறப்படுகிறது. இது இந்துக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த ரிசல்ட் வைரலாகி வருகிறது. நபர் ஒருவர் புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கையில் இருந்து நீரை எடுத்துவந்து ஆய்வு செய்துள்ளார்.
நவீன ஆய்வக நுண்ணோக்கியில் பரிசோதனை
அதில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளமை அவருக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அதனை நம்பாத அவர் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த நீரைக் கொடுத்து ஆய்வு செய்துள்ளார். அங்கு அதி நவீன ஆய்வக நுண்ணோக்கியில் பரிசோதனை செய்துள்ளனர்.
அதிலும் கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லை என்றே தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதனை நான்கு நாட்கள் கழித்து பரிசோதனை செய்துள்ளனர். அப்போதும், அதில் ஒரு நுண்ணுயிர் கூட உருவாகவில்லை.
இந்த நிலையில் கங்கையின் ஆய்வின் முடிவு வெளியாகி பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது. அதேவேளை பொதுவாக ஏரி, குளம், ஆறு போன்ற பொது நீர்களில் அதிகளவில் நுண்ணுயிர்கள் இருக்கும் அல்லது உருவாகும் , ஆனால் கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளமை ஆச்சர்யம்தான்.