வடக்கு மாகாணத்திற்கான அரச பரீட்சைகள் ஒத்திவைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் விவசாயப் போதனாசிரியர் தரம் III மற்றும் பயிற்சித் தரம் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் நாளை சனிக்கிழமை 29 மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 30 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்தன.

எனினும், தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலையை கருத்திற் கொண்டு, இப்பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை நடைபெறும் புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.