வடமாகாண கல்விப் பணிப்பாளராக புதியவர் நியமனம்!
வடமாகாணத்தின் 5வது மாகாண கல்வி பணிப்பாளராக ரி.ஜோன் குயின்ரஸ் வடமாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1986 ஆம் ஆண்டு சென் பற்றிக்ஸ் கல்லுரியில் ஆசிரியராக இணைந்து கொண்ட குயின்ரஸ் பாடசாலை அதிபராக அதன் பின் பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராக சேவையாற்றியுள்ளார்.
வலயக் கல்விப் பணிப்பாளராக
பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், தீவகம், மடு துணுக்காய், கிளிநெச்சி ஆகிய பகுதிகளில் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றியுள்ளார்.
அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் ஒன்று அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
வடமாகாண கல்வி அபிவிருத்தி, திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக பதவி வகித்த நிலையில் தற்போது வடமாகாண கல்வி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளமௌ குறிப்பிடத்தக்கது.