வடக்கு–கிழக்கு நிபுணர்கள் மீண்டும் புறக்கணிப்பு ; தொல்லியல் குழு நியமனத்திற்கு எதிர்ப்பு
இலங்கையின் தொல்லியல் ஆலோசனை குழுவில் நியமனங்கள் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளதாக சமூக வலைதள பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ இரத்னபால உபாலி நாயக்க தேரர் தலைமையில் முன்பே நியமிக்கப்பட்டிருந்த 19 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் மேலும் நான்கு பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்டபடி தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்காமல் மீண்டும் சிங்கள உறுப்பினர்களே அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனி சிங்கள தொல்லியல் ஆலோசனை குழு தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து 4 தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது மேலும் ஒரு சிங்களவர் இணைக்கப்பட்டு உதிரியாக 2 தமிழர்கள் மற்றும் 1 முஸ்லிம் இணைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
இதில் தொல்லியல் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 8 சிங்கள பேராசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது
அதே போல ஓய்வு பெற்ற 2 சிரேஷ்ட சிங்கள தொல்லியல் துறை பேராசிரியர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது இது தவிர, தொல்லியல் மற்றும் வரலாற்று துறையில் கலாநிதி பட்டம் பெற்ற 6 மூத்த சிங்கள தொல்லியல் ஆய்வாளர்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
இது போதாதென்று தொல்லியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்று Bhiksu University யின் பீடாதிபதியாக பணியாற்றும் பிக்கு உட்பட 3 பௌத்த தேரர்களுக்கு தொல்லியல் ஆலோசனை குழுவிற்கு இணைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
அதாவது இலங்கையில் தொல்லியல் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 20 மூத்த சிங்கள புத்திஜீவிகள் தற்போது 23 பேர் கொண்ட தொல்லியல் ஆலோசனை குழுவிற்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள்

இந்த 87 சதவீதம் சிங்கள தொல்லியல் சிறப்பு தேர்ச்சி பெற்ற புத்திஜீவிகள் அங்கம் வகிக்கும் தொல்லியல் ஆலோசனை சபைக்கு ஓய்வு பெற்ற தமிழ் துறை பேராசிரியர் மகேஸ்வரன் மற்றும் பட்டய கட்டிடக் கலைஞர் ஒருவரை தமிழர்கள் சார்பில் இணைத்திருக்கின்றார்கள்
தேவநம்பிய தீசன் காலத்திற்கு முன்பே பௌத்தம் இலங்கையில் வேர் ஊன்றி இருந்தது என வாதிடும் பேராசிரியர் ராஜ் சோமதேவா முதல் மட்டக்களப்பு தொப்பிகல (குடும்பிமலை) பகுதியை மையப்படுத்தி கிழக்கு மாகாண பௌத்த மத தோற்றம் குறித்து ஆய்வுகளில் ஈடுபடும் பேராசிரியர் சஸ்னி நர்மதா அமரசேகர வரையான சிங்கள புத்திஜீவிகளை துறை சாரத தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்ள முடியும் குறிப்பாக ஆய்வுகளில் ஈடுபடும் வடக்கு கிழக்கு பல்கலை கழகங்களின் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்ந்த நிபுணர்கள் ஏன் முழுமையாக தவிர்க்க பட்டு இருக்கின்றார்கள் என தெரியவில்லை
கோட்டாபய ராஜபக்சே அதிரத்தில் இருந்த போது 16 பேர் கொண்ட தனி சிங்கள கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்திருந்தார்
அப்போதும் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை என்கின்ற குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட போது மேலும் ஒரு சிங்களவரை நியமித்து உதிரிகளாக தலா ஒரு தமிழருக்கும் முஸ்லிமுக்கும் இடம் வழங்கப்பட்டு இருந்தது
அந்த நேரமும் வடக்கு கிழக்கு பல்கலை கழக துறை சார்ந்த நிபுணர்கள் தவிர்க்கப்பட்டு வடக்கு மாகாண செயலாளராகவிருத்த திரு பத்திநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது கோட்டாபய ராஜபக்சே செய்த அதே வேலையை தற்போது ஜேவிபி ஆட்சியாளர்களும் செய்கின்றார்கள்.

வெறும் எண்ணிக்கைக்கு வாய்ப்புகளை வழங்கி தங்கள் எண்ணங்களை செயலாக்க முயற்சிக்கின்றார்கள் இதற்கிடையில் இன்று கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் தந்தாமலை பகுதியை தொல்லியல் இடமாக அடையாளப்படுத்தி இருக்கின்றார்கள்
கடந்த சில ஆண்டுகளாக இப் பகுதியுள்ள தாந்தாமலை முருகன் ஆலயம் தொல்லியல் திணைக்கள நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்த நிலையில் இன்று இப் பகுதியை தொல்லியல் பகுதியாக அறிவிருத்திருக்கின்றார்கள்
ஆனால் இனவாதத்தை ஒழிப்போம் என கூறும் ஜேவிபி, இத்தகைய ஒருதலைப்பட்ட நியமனங்களின் மூலம் தங்கள் கருத்துகளை திணிக்க முயல்கின்றதென எதிர்க்கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.
அதேவேளை, அரசுக்கு ஆதரவாக செயல்படும் சில பேச்சாளர் குழுக்கள் தவறான தரவுகளுடன் சர்ச்சைகளை உருவாக்குகின்றனர் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது என சமூக வலைத்தளப்பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.