100 நாட்களுக்கு மூடப்படும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம்
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு ஜூன் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 100 நாட்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜூன் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு மூடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு ஏதும் இருக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாரிய பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் இந்த காலப்பகுதியில் ஏனைய அனல் மின் நிலையங்களுடன் இணைந்து அதனை நிர்வகித்து மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.