யாழ் மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்
யாழ்ப்பாணம் வலி வடக்கு மயிலிட்டி சந்திக்கும் ஹோமண்டோஸ் பங்களாவிற்கு முன்பாக இன்று (3) காலை 9 மணியளவில் ஆரம்பமானது.
11வது வாரமாக மயிலிட்டி பகுதியில் உள்ள தனியார் காணிகள் மற்றும் 21 இந்து கிறித்தவ ஆலயங்கள், விவசாய நிலங்களில் இராணுவ குடியேற்றம் மட்டுமன்றி இராணுவம் விவசாயம் செய்கின்றார்கள் தமது வழிபாட்டு தலங்களில் வழிபடுவதற்கான அனுமதிகளை வழங்க கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரச தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் இதுவரை அரச தரப்பில் இருந்து தமது காணிகளை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 36 வருடங்களுக்கு மேலாக சொந்த நிலங்களில் வாழும் உரிமையை இழந்துள்ள போதிலும் இராணுவத்தினர், செபஸ்தியார் கோவில் மற்றும் காணிக்கை மாதா கோவில்களுக்கு மக்கள் சென்று வழிபட அனுமதிக்காமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அநுர அரசாங்கம் மக்களின் காணிகள் மக்களுக்கே என்று கூறி ஆட்சிக்கு வந்த போதிலும் இதுவரை மக்களின் காணிகளை ஏன் விடுவிக்க வில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளதுடன், விடுவிக்க தவறினால் போராட்டத்தை பாரியளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். நிரந்தரமாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.