வவுனியாவில் வெடிக்காத நிலையில் ஆர்பீஜி செல் மீட்பு
வவுனியா வெடிக்காத நிலையில் செல் மீட்கப்பட்டுள்ளது.
கனகராயன் குளம் - மன்னகுளம் - குஞ்சுக்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் மற்றும் ஆர்பீஜி செல் ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் தோட்ட காணியொன்றினை சுத்தப்படுத்திய போது அங்கு வெடிபொருட்கள் இருப்பது தொடர்பாக நேற்று குறித்த பகுதிக்கு அருகாமையிலுள்ள இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவம் மற்றும் பொலிசார் மண்ணிற்குள் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
அத்துடன், அதனை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
