கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதங்கள்!
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இன்றையதினம் (18-10-2024) தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஆளுநரால் வழங்கப்பட்டன.
புதிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்குவதாக தெரிவித்தார்.
புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டியல் இதோ,
தலைவர் - பி.எச்.என். ஜெயவிக்ரம
உறுப்பினர் - கே. அருந்தவராஜா
உறுப்பினர் - ஜி.எல்.ஆரியதாச மாயா
உறுப்பினர் - எஸ். ஹமீத் ரிபாஹிதீன்
உறுப்பினர் - எஸ். முகமது இக்ரிமா