அத்தியாவசியப் பொருட்களுக்கு வரியா? அமைச்சர் பசில் ராஜபக்ஷ
பொருட்கள் மீதான உத்தேச வரிகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
புதிய வர்த்தக வரிகள் தொடர்பான விபரங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டால், மக்கள் தேவையற்ற நன்மைகளைப் பெறக்கூடும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதற்கு உதாரணமாகக் சந்தையில் சிகரெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தவறியமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த நிதியமைச்சர், 1947 ஆம் ஆண்டிலிருந்து இது ஒரு பிரச்சினையாக இருந்த போதிலும் எந்தவொரு அரசாங்கமும் பொருட்களின் விலைகளைக் குறைக்க முன்மொழியவில்லை எனவும் கூறினார்.
விநியோக அதிகரிப்பால் மட்டுமே விலையைக் குறைக்க முடியும் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது மேலும் கூறினார்.