லங்கா ஐ.ஓ.சி, சினொபெக் விலையில் திருத்தம் இல்லை!
மார்ச் மாதம் தமது எரிபொருள் விலையும் திருத்தப்பட மாட்டாது என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் சினொபெக் நிறுவனமும் அறிவித்துள்ளன.
அதேவேளை இறுதியாகக் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
எரிபொருள் விலை திருத்தப்பட மாட்டாது
மேலும் இந்த மாதம் எரிபொருள் விலை திருத்தப்பட மாட்டாது என ஏற்கனவே இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய விலையிலேயே மார்ச் மாதமும் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதேவேளை நேற்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன வரிசைகள் ஏற்பட்டுள்ளது.