என்ன பண்ணாலும் உடல் எடை குறைய மாட்டேங்குதா? காரணம் என்ன தெரியுமா?
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக சில சமயங்களில் நாம் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாமல் ஒரு இடத்தில் அப்படியே தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் நம்மில் பலரும் முதலில் செய்வது உணவை குறைப்பதுதான். காலையில் நடைப்பயிற்சி செல்வோம், பிடித்தமான இனிப்புகளை தவிர்ப்போம், ஜிம்முக்கு சென்று கடினமாக உழைப்போம். ஆனால், இவ்வளவு செய்தும் எடை மட்டும் ஒரு அங்குலம் கூட குறையாமல் அப்படியே இருக்கும்போது நமக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும்.

இன்சுலின் மற்றும் கொழுப்பு சேமிப்பு
இன்சுலின் என்பது நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஒரு மிக முக்கியமான ஹார்மோன் ஆகும். நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற இன்சுலின் உதவுகிறது. ஆனால், நம் உடலில் இன்சுலின் அளவு எப்போதும் அதிகமாகவே இருக்கும்போது, உடல் தானாகவே கொழுப்பு சேமிப்பு முறைக்கு (Fat storage mode) மாறிவிடுகிறது.
நாம் கலோரிகளை குறைத்து சாப்பிட்டாலும், இன்சுலின் சமநிலையில் இல்லை என்றால் எடையை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கும். எனவே ரத்த சர்க்கரையை சீராக வைப்பதே எடை குறைப்பிற்கான முதல் படியாகும். கார்டிசோல் எனும் மன அழுத்த ஹார்மோன் அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது
கார்டிசோல் எனப்படும் ஹார்மோன். இது நம் உடலில் மன அழுத்தம் ஏற்படும்போது சுரக்கக்கூடியது. இன்றைய சூழலில் அலுவலக வேலை, வீட்டுப் பொறுப்புகள் அல்லது போதிய தூக்கம் இல்லாதது என ஏதோ ஒரு வகையில் நாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கும்போது அது நம் பசியை தூண்டுகிறது. குறிப்பாக இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவலை இது அதிகப்படுத்துகிறது. இதனால் நாம் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவது சவாலாக மாறுகிறது.

மன அழுத்தத்தை குறைத்து, போதுமான உறக்கத்தைப் பெறுவதன் மூலம் மட்டுமே இந்த ஹார்மோனை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இது சீராக இருந்தால் மட்டுமே எடையை குறைக்கும் முயற்சி வெற்றியில் முடியும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலையின்மை பெண்களின் உடலில் மிக முக்கிய பங்காற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் உடல் எடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஹார்மோன் அளவு உடலில் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருக்கும்போது, அது உடலில் நீர்ச்சத்தை தேக்கி வைப்பதோடு (Water retention) தேவையற்ற கொழுப்பையும் சேர்க்கிறது. இது பெரும்பாலும் உடல் வீக்கம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால்தான் சில சமயங்களில் நாம் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாமல் ஒரு இடத்தில் அப்படியே தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. ஹார்மோன் மாற்றங்கள் என்பது இயற்கையானது என்றாலும், அதை சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையின் மூலம் சமநிலையில் வைப்பது அவசியம். ஈஸ்ட்ரோஜன் சரியாகச் செயல்படும்போது உடல் எடை குறைப்பு என்பது இயற்கையாகவும் தடையின்றியும் நடக்கும்.
ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது, அன்றாட வாழ்வில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வது மற்றும் சத்தான உணவுகளை தொடர்ச்சியாக உண்பது போன்ற அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நம் உடலின் உட்புற செயல்பாடுகள் சீராக இருக்கும்போது, உடல் கொழுப்பை எரிக்கும் வேலையை மிக சிறப்பாக செய்யும்.
