முகக்கவசம் இல்லை; 5000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்
முகக்கவசம் இன்றி கொவிட் தொற்று நோய் சமூகத்தில் பரவும் விதத்தில் செயற்பட்ட நபர் ஒருவருக்கு 5000 ரூபாய் தண்டப்பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியாவில் கொவிட் 19 தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு வேறு வழக்கில் நீதவான் நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டுள்ளது .
அதன்படி பூவரசன்குளம் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது .
குறித்த குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்ட இரு வழக்குகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் இருபதினாயிரம் தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது. இதன்போது முக்கவசம் அணியாதவருக்கு நீதிமன்றத்தினால் 5000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபர் தண்டப்பணத்தைத் செலுத்தும் வரையில் சிறையில் அடைப்பதற்கும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.