நாட்டு மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் இன்றைய தினமும் (25-05-2022) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் நாளை விநியோகிக்கப்படாது என முதன்மை எரிவாயு வழங்குநர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் நேற்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தது.
மேலும், எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் என அந்நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, 3500 மெட்ரிக் தொன் திரவ பெற்றோலிய வாயு (LPG) ஏற்றுமதி வியாழக்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிவாயு சிலிண்டர்களை பெறுவதற்கு பொதுமக்கள் பல மணித்தியாலங்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.