வாக்களிக்க விடுமுறை வழங்கவில்லை; தனியார் நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள்!
இலங்கையில் நாளை 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கிணங்க தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து அரச சார்பற்ற அல்லது தனியார் நிறுவனங்களில் (ஆடைத் தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள் , தனியார் தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்கள்) பணிபுரியும் ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு கால அவகாசமும் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.