செல்வதற்கு வீடு இல்லை - ரணில் விக்ரமசிங்க
கண்டி நகரில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிலர் நான் வீட்டுக்கு போக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்த போகிறோம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
"போராட்டக்காரர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் போராட்டம் எதிலும் ஈடுபட வேண்டாம். ஏனெனில் எனக்கு செல்வதற்கு வீடு எதுவும் இல்லை. என்னை வீட்டுக்கு போகும்படி வலியுறுத்துவது என்பது நேரம் வீணடிக்கும் செயல். அதற்கு பதிலாக, போராட்டக்காரர்கள் எரிந்து போன எனது வீட்டை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும்" என விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, வீடு எதுவும் இல்லாத ஒருவரிடம் சென்று வீட்டுக்கு போகும்படி கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனது வீடு மீண்டும் கட்டப்பட்ட பின்னர் போராட்டக்காரர்கள் என்னிடம் வீட்டுக்கு செல்லும்படி வலியுறுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.
ஒன்று போராட்டக்காரர்கள் நாட்டை கட்டியெழுப்பவோ அல்லது எனது வீட்டை மீண்டும் கட்டியெழுப்பவோ செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் போராட்ட சூழலால் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெறுவதற்கான சாத்தியப்பட்ட ஒப்பந்தம் தள்ளி போய் கொண்டே இருக்கிறது என சுட்டி காட்டிய ரணில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டெழுவதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றி நிரந்தர தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்