பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
இந்த விடயம் தொடர்பில் கட்சி மட்டத்தில் உள்ளக ரீதியான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, நிதியை பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அறிவிக்காமை, நாட்டில் பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்காமை மற்றும் பதிலளிக்காமை ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லா பிரேரணைக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி செயற்குழு ஆகியன கலந்துரையாடி விரைந்து இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.