ஜீவசமாதி அடைந்தாரா சர்ச்சைக்கு பஞ்சமில்லாத சாமியார் நித்யானந்தா ; பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்!
நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
சர்ச்சைக்கு பஞ்சமில்லாத சாமியார் நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவரது உடலில் என்ன பாதிப்பு என்று இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
சமீபத்தில் அவர் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என கூறி இருந்தார்.
இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
எனினும் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பினர் கூறுயிருப்பதாவது,
கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.