அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்த நீடா அம்பானி!
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி பங்கேற்றுள்ளனர்.
பதவியேற்பு விழாவுக்கு முன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், அம்பானியும் பங்கேற்றனர். அப்போது அதிபர் டொனால்ட் டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த நிகழ்ச்சிகளில் நீடா அம்பானி காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வந்தது பலரையும் கவர்ந்துள்ளது.
அவர் அணிந்திருந்த காஞ்சிப்பட்டு சேலையில், காஞ்சிபுரத்தின் பழம்பெருமை வாய்ந்த கோவில்களின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில் டிரம்ப் விழாவில் காஞ்சிப் பட்டுச் சேலையில் நீடா அம்பானி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.
ஸ்வதேஷ் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த சேலை, தேசிய விருது பெற்ற கலைஞர் கிருஷ்ணமூர்த்தியால் வடிவமைக்கப்பட்டிருந்தது.