நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்குவதாக சாள்ஸ் நிர்மலநாதன் உறுதி
மக்களின் விருப்பத்திற்கு அமைய மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் சாள்ஸ் நிர்மலநாதன் களம் இறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்முறை நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதன் தனது தனிப்பட்ட முடிவாக நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்குவதில்லை என்ற முடிவு எடுத்திருந்தார்.
எனினும் இன்றைய தினம் மீண்டும் கூடிய கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கின்ற தீர்மானத்தை எடுத்து தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.
மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மீண்டும் இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் களம் இறங்குவதாக அறிவித்துள்ளார்.