டெங்கு நோய் பாதிப்பு அதிகரிப்பு ....பதிலளிக்க எந்த அமைச்சரும் இல்லை; அதிருப்தி வெளியிட்ட எம்பி
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த அரசாங்கத்தின் பதிலைப் பெற சுகாதார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சபையில் இல்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சபையில் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் "நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. பதிலளிக்க எந்த அமைச்சரும் இல்லை, பதில் கூற வேண்டிய பொறுப்பு தற்காலிக சபை முதல்வரிடம் மட்டுமே உள்ளது" என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதற்குப் பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க , நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பதில்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமைச்சரவை சார்ந்த அமைச்சர்கள் சபையில் இல்லாதது மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து உறுப்பினர்களுக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.