நாமலின் கருத்தை நிராகரித்தார் நிமாலி லியனாராச்சி
ஒலிம்பிக் வீரர்களுக்கான அனைத்து வசதிகளையும் இலங்கை ஒலிம்பிக் குழுவே மேற்கொண்டதாகவும் பணமும் அளிக்கப்பட்டதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பழைய சப்பாத்து ஜோடியைப் பயன்படுத்தியவரும், ஆடைகளுக்கு பின் குத்தி போட்டியில் பங்கேற்றவருமான நிமாலி, அமைச்சர் நாமலின் கருத்தை முற்றாக நிராகரித்துள்ளார்.
அத்துடன் ஒலிம்பிக் குழுவிடம் தாம் புதிய பாதணியை கொள்வனவு செய்ய உதவிடுமாறு கோரிய போதிலும் அவர்கள் எந்த பதிலையும் இறுதிவரை தரவில்லை என்றும் நிமாலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒலிம்பிக் போட்டியில் ஓட்டவீராங்கணை நிமாலி லியனாராச்சி, பயன்படுத்திய ஆடை மற்றும் பின் குத்திய பெயர்ப்பதாதை குறித்த சர்ச்சை நீடித்து வருகின்றது.