இரவு நேர களியாட்ட விடுதி விவகாரம்; யோஷிதவுடன் சென்ற மூவர் பொலிஸில் சரண் !
கொழும்பு களியாட்டவிடுதியில் வெள்ளிக்கிழமை (21) இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற மூவர் , பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (26) சரணடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்குக் கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது.
சி.சி.ரி.வி. கமரா
இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலின் போது யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த மோதல் சம்பவம் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந் நிலையில் மோதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் மத்திய கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்றைய தினம் சரணடைந்துள்ளனர்.