உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கான தகவல்
தற்போதைய காலத்தில் பெரும்பாலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதியடைகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் அல்லது கர்ப்பமாக இருக்கத் திட்டமிடுபவர்களுக்கு உடல் பருமன் ஒரு தீவிர உடல்நலப் பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் உடல் பருமன் கர்ப்ப காலத்தில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய், இருதய நோய், சில புற்றுநோய்கள் மற்றும் மனநலப் பிரச்சனைகள் போன்ற ஆபத்தான நோய்கள் உருவாக்கும் வாய்ப்பு அதிகம்.
அத்தோடு கர்ப்ப காலத்தில் உடல் பருமனால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படலாம். எனவே நீங்கள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்பினால் முதலில் உங்கள் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) தீர்மானிக்க வேண்டும்.
உடல் பருமன் மற்றும் கர்ப்பத்துடன் தொடர்புடைய சிக்கல்கள்
கர்ப்ப காலத்தில் அதிக உடல் பருமனோடு இருப்பது ஆரோக்கியத்திற்கும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
உடல் பருமன் என்பது 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ கொண்டதாக வரையறுக்கப்படுகிறது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, 25 முதல் 29.9 வரை பிஎம்ஐ உள்ள பெண்கள் அதிக எடை கொண்டவர்களாகவும், 18.5 முதல் 24.9 வரை பிஎம்ஐ உள்ள பெண்கள் ஆரோக்கியமானவர்களாக கருதப்படுகிறது.
எனவே பருமனாக இருப்பவர்கள் குழந்தையை கருத்தரிப்பதில் இருந்து பிரசவம் வரை சிரமப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
கர்ப்பகால நீரிழிவு நோய்
உடல் பருமன் கர்ப்பகால நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. தாய் மற்றும் குழந்தையின் உயர் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
உடல் பருமன் மேக்ரோசோமியா (பெரிய பிறப்பு எடை), குறைப்பிரசவம் மற்றும் சுவாசக் கோளாறு நோய்க்குறி போன்ற சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
பிரசவ கால வலிப்பு
உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரதத்தை ஏற்படுத்தும் கர்ப்பம் தொடர்பான பிரசவ கால வலிப்பு பிரச்சனையை உருவாக்கலாம்.
இது தாய் மற்றும் சேயின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். முன்கூட்டிய பிறப்பு மற்றும் குறைந்த எடையுடன் பிறப்பு உட்பட தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
அத்தோடு உடல் பருமன் சிசேரியன் பிரசவத்திற்கு வழிவகுக்கும்.
கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறப்பது
கருச்சிதைவு, பிரசவத்தில் குழந்தை இறந்து பிறப்பது மற்றும் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தோடு உடல் பருமன் தொடர்புடையது.
இது தாய் மற்றும் அந்த குடும்பத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தம் போன்ற உங்கள் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு உடல் பருமன் காரணமாக இருக்கலாம்.
பிறப்பு குறைபாடுகள்
கர்ப்ப காலத்தில் உடல் பருமனாக இருப்பது நரம்பு குழாய் குறைபாடுகள், இதய குறைபாடுகள் மற்றும் ஓரோஃபேஷியல் பிளவுகள் உட்பட பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
கர்ப்பத்திற்கு முந்தைய எடை மற்றும் பிஎம்ஐ உயரம், எடை மற்றும் ஆரோக்கிய நிலை போன்ற தனிப்பட்ட காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.
எனவே உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை முதலில் புரிந்துகொண்டு கர்ப்பத்தைத் திட்டமிட வேண்டும்.