பாகிஸ்தான் வீரர்களை புறக்கணித்த இந்திய வீரர்கள்
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் போட்டி நடந்ததால் டாசிலும், போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கை கொடுக்காமல் புறக்கணித்தமை பேசுபொருளாகியுள்ளது.
துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்திய அணி 16 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவதைத் இந்திய வீரர்கள் தவிர்த்தனர்.
இந்திய வீரர்கள் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இதனைச் செய்ததாகக் கூறப்படும் நிலையில் ைந்திய வீரகளின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.