பிக்பாஸ் வீட்டில் ரெடியாகும் அடுத்த ட்விஸ்ட்!
ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு உள்ளான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றைய தினம் சிறப்பான கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியுள்ளது. கடந்த 5 சீசன்களை போலவே இந்த சீசனிலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்றைய பொழுது பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் சிறப்பாக பொழுதாக விடிந்துள்ளது. ஆரம்பமே அமர்க்களமாக அனைவரும் இணைந்து எங்க ஏரியா உள்ள வராத என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். ஜிபி முத்துதான் இந்த ஆட்டத்தில் முதன்மையாக காட்டப்பட்டார்.
முதல் ப்ரமோ
முதல் ப்ரமோ இதனிடையே தற்போது நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் வழக்கமான செயல்பாடாக, ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவராக வந்து நிகழ்ச்சியில் தங்களை குறைவாக கவர்ந்த இருவரை காரணத்துடன் கூற வேண்டும் என யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி வாசித்தார்.
இதையடுத்து ஜிபி முத்து அனைவரையும் பிடித்துள்ளதாக கூற, அதை மற்ற போட்டியாளர்கள் ஏற்கவில்லை. இதனிடையே போட்டியாளர்களில் நான்கு பேர் அடுத்தவார எலிமினேஷனில் நேரடி நாமினேஷன் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிக்பாஸ் கூறுகிறார்.
இவ்வாறு வெளியான புதிய ப்ரமோவில் கூறப்பட்டுள்ளமை ரசிகர்களுக்கு ட்விஸ்டாக அமைந்துள்ளது.
6வது சீசனில் பிக்பாஸ்
அடுத்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் மனிதனின் மனநிலையை மையமாக கொண்டு கடந்த 2017ம் ஆண்டில் தமிழில் துவங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனின் தொகுப்பும் இணைய மிகவும் பரபரப்பான நிகழ்ச்சியாக மாறியுள்ளது பிக்பாஸ்.
தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.