சுற்றுலா பயணிகளுக்கான நற்செய்தி ; இஸ்தான்புல்–கொழும்பு விமானங்கள் அதிகரிப்பு
இஸ்தான்புல்–கொழும்பு இடையிலான விமான சேவைகளை அதிகரிப்பதாக துருக்கிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, வாரத்திற்கு மேலும் இரண்டு கூடுதல் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
இது சிக்கலில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு உதவவும், இலங்கைக்கு அணுகலை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த முடிவு, இலங்கை மற்றும் துருக்கி இடையிலான தூதரக மட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) தேவையான அனுமதிகளை விரைவாக வழங்கியதால், குறித்த விமான நிறுவனம் தனது சேவைகளை வலுப்படுத்த முடிந்துள்ளது.
புதிய அட்டவணை 2026 ஏப்ரல் 5 முதல் ஒக்டோபர் 21 வரை நடைமுறைப்படுத்தப்படும், இதன் மூலம் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் பயணிகளுக்கு அதிக வசதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை பயண சிக்கல்களை குறைப்பதுடன், இலங்கையின் சர்வதேச விமான இணைப்பை வலுப்படுத்தவும், சுற்றுலாத்துறையின் தொடர்ந்த வளர்ச்சிக்கும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.