கோட்டா கோ கமவில் புதுமணத் தமிழ்த் தம்பதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி பெருமளவானோர் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு, காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் 50 நாட்களைப் பூர்த்திசெய்துள்ளது.
அதனை முன்னிட்டு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடலை நோக்கி ஏற்பாடு செய்திருந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்காகவே தாம் வருகைதந்திருப்பதாக இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த புதுமண தமிழ்த் தம்பதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
