ஹனிமூன் சென்ற தம்பதி; ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; நடந்தது என்ன?
இந்தியாவின் டெல்லியில் வசித்து வரும் தம்பதி டேராடூன்க்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த தம்பதி விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்தப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, டெல்லியை சீர்ந்த ராதா காயத்ரி (27). இவர் குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.

ஹனிமூன் சென்ற தம்பதி
இவரும் இவரது கணவர் சௌம்யா ஸ்ரீசரனும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீசரனும் ஐடி துறையில் புனேவில் பணியாற்றி வருகிறார். ராதா காயத்ரி மற்றும் ஸ்ரீசரன் ஆகிய இருவருக்கும் கடந்த 2025 நவம்பர் 8 ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது
கடந்த ஜூன் 13 ஆம் திகதி இந்த தம்பதியினர் டெல்லியில் இருந்து ரிஷிகேஷிற்கு சென்றனர்.
ஒரே இரவில் பேய்களால் கட்டபட்ட பிரபல சிவன் ஆலயம் ; எங்குள்ளது தெரியுமா! அமானுஸ்யங்கள் நிறைந்த அதிசயம்
மறுநாள் , இரவு முசோரியில் உள்ள விடுதிக்கு சென்று தங்கிய நிலையில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெண்ணின் கணவன் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில்,
இரவு தம்பதியினர் இருவரும் மது அருந்தியுள்ளனர். அதிகாலை 3:30 மணியளவில் இருவரும் உறங்கச் சென்றுள்ளனர். மறுநாள் காலை ஸ்ரீசரன் எழுந்து பார்த்தபோது, தனது மனைவி ராதா காயத்ரி ஆடைகளின்றி, அசைவற்ற நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் சென்று பார்த்த போது ராதா காயத்ரி மூக்கிலிருந்து ரத்தம் வழிந்திருந்ததாகவும் அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் படுக்கை விரிப்பில் ரத்தக் கறைகள் காணப்பட்டன. மேலும், இரண்டு காலி மது பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஹனிமூன் சென்ற இடத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் முசோரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.