உலகக் கிண்ண தொடரில் மீண்டும் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை பெற்றுள்ளது.
இன்றைய தினம் பெங்களூரில் உள்ள சின்னசுவாமி மைதனத்தில் இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 51 ஓட்டங்களையும், மஹீஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
நியூசிலாந்து அணி சார்பில் டெவோன் கான்வே 45 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 42 ஓட்டங்களையும் மற்றும் டேரில் மிட்செல் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மெத்தியூஸ் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியை தொடர்ந்து 10 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 4 இடத்தை பெற்றுள்ள நிலையில் அரையிறுதிக்கான அதிக வாய்ப்பை பெற்றுள்ளது.