புத்தாண்டை முன்னிட்டு யாழ் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் வர்த்தக சந்தை!
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு யாழ். வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிமானி வர்த்தக சந்தை இரு நாட்கள் விற்பனை இடம் பெற்றுள்ளது.
இந்த வர்த்தக சந்தை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று முதல் இன்று பிற்பகல் 5 மணியுடன் இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை அமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை எனும் பெயரில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதில் உள்ளூர் உற்பத்திகளான சிற்றுண்டி வகைகள், கருவாடு வகைகள், பற்றிக் வகைகள், மரக்கன்றுகள், ஆபரண பொருட்கள் போன்ற பல பொருட்கள் விற்பனை இடம் பெற்றது.
அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் வந்து கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.