வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் புதிய திருப்பம் ; இந்தியாவில் கைது செய்யப்பட்ட இருவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
கொழும்பு வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், அந்நாட்டு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பின்னர் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இருவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே குறித்த இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இருவரிடமும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பெறப்படவுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பது விசாரணைகளின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.