கண் நோயின் புதிய அச்சுறுத்தல் ; நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
பார்வையைச் சிதைக்கும் கண் கோளாறான கண்களின் முன்பகுதி வீக்கமடைந்து கூம்பு வடிவில் மாறுதல் என்ற கெரடோகோனஸ் பாடசாலை மாணவர்கள் உட்பட இலங்கையர்களிடையே அதிகரித்து வருவதாகத் தேசிய கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது.
உலக கெரடோகோனஸ் தினத்தைக் குறிக்கும் வகையில், இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் மருத்துவர் குசும் ரத்னாயக்க, ஒரு காலத்தில் அரிதாகக் கருதப்பட்ட இந்த நிலை இப்போது எட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.

கெரடோகோனஸ் கண்ணின் தெளிவான முன் மேற்பரப்பான கார்னியாவை படிப்படியாக மெலிந்து கூம்பு வடிவத்தில் வீக்கமடையச் செய்கிறது, இதன் விளைவாக மங்கலான அல்லது சிதைந்த பார்வை ஏற்படுவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.