நாளை முதல் புதிய கட்டண திருத்தம் அமுல்!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டணங்கள் நாளை ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என பணியகம் அறிவித்துள்ளது.
2023 ஜூன் 23 ஆம் திகதி 2337/27 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பதிவு கட்டணங்கள் மற்றும் முகவர் நிலையத்தை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் சகல இலங்கையர்களும் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமப் பத்திரத்துக்கான செல்லுபடியான கால எல்லை ஒரு வருடமாகும்.
மேலும் முகவர் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதாயின், உரிமத்தை நீட்டிப்பதற்கு பணியகத்தின் ஒப்புதல் சட்டத்தின் விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
திருத்தப்பட்ட கட்டண விபரம்:
1. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பதிவுக் கட்டணம்
பழைய கட்டணம் - ரூ.17,928.00 (வரிகளுடன்)
புதிய கட்டணம் - ரூ.21,467.00 (வரிகளுடன்)
2. பதிவை புதுப்பித்தல் கட்டணம்
பழைய கட்டணம் - ரூ.3, 774.00 (வரிகளுடன்)
புதிய கட்டணம் ரூ.4,483.00 (வரிகளுடன்)
3. வேலைவாய்ப்பு முகவர் உரிமத்தை புதுப்பித்தல் கட்டணம்
பழைய கட்டணம் ரூ.58,974.00 (வரிகளுடன்)
புதிய கட்டணம் ரூ.117,949.00 (வரிகளுடன்).