சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு
சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் உடல் தொடர்ந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு ஆகியவற்றின் பரிசோதனையில் தெரியவந்ததது.
சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்று 12 வாரங்களுக்கு பிறகு உடலில் உள்ள டி செல்கள் கொரோனா வைரஸுக்கு வெளி உடலாக வெற்றிகரமாக பதில் அளித்ததாகவும் ஆய்வில் தெரியவந்தது.
மேலும் அனைத்து வயது பிரிவினருக்கும் காலப்போக்கில் தடுப்பூசியால் உருவாகும் னாய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கணிசமாக குறைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.