சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய புதிய ஆய்வு மையம்

Sri Lanka Cyber Attack Crime
By Sahana Jul 31, 2026 10:00 AM GMT
Report

அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய தகவல் உட்கட்டமைப்புகளின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மட்டத்திலான சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware) பகுப்பாய்வு ஆய்வு மையமான MATH Lab-ஐ இலங்கை CERT நிறுவனம் உத்தியோகபூர்வமாக நிறுவியுள்ளது.

சரத் பொன்சேகா தாக்குதல் வழக்கு ; 17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கு பிணை

சரத் பொன்சேகா தாக்குதல் வழக்கு ; 17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கு பிணை

இந்த ஆய்வு மையத்தின் நிறுவல், இலங்கையின் சைபர் பாதுகாப்பு துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்த பின்னர் பதிலளிக்கும் பாரம்பரிய நடைமுறையிலிருந்து விலகி, உளவுத்தகவல் அடிப்படையிலான முன்கூட்டிய அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.

நாட்டில் டிஜிட்டல் அரச சேவைகளும் இணையவழி அரச தளங்களும் விரிவடைந்து வரும் நிலையில், 'பிஷிங்' தாக்குதல்கள், தரவுக் கசிவுகள் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு அமைப்புகளின் பலவீனங்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை CERT தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய புதிய ஆய்வு மையம் | New Research Center To Detect Cyber Attacks Early

தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையம் (NCSOC) தற்போது மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் சம்பவங்களுக்கு பதிலளிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், முன்கூட்டியே அச்சுறுத்தல்களை கண்டறிந்து மேம்பட்ட பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் தனித்திறன் கொண்ட அமைப்பின் தேவை காரணமாகவே MATH Lab நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மையம், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக Proactive Threat Hunting உள்ளிட்ட மேம்பட்ட சேவைகளை வழங்கி, வலையமைப்புகளுக்குள் மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை சேதம் ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் திறனை வழங்கும்.

மேலும், அரச நிறுவனங்களின் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு சொத்துக்களை External Attack Surface Monitoring (EASM) தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ச்சியாகக் கண்காணித்து, பாதுகாப்பு குறைபாடுகள், தவறான கட்டமைப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் நுழைவு வாயில்களை அடையாளம் காண்பதும் இந்த ஆய்வு மையத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

அதேவேளை, தேசிய சைபர் அச்சுறுத்தல் உளவுத்தகவல் (Cyber Threat Intelligence – CTI) பகிர்வு அமைப்பின் ஊடாக, அரச நிறுவனங்களுக்கு நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, உரிய நேரத்தில் பகிர்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த சைபர் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய புதிய ஆய்வு மையம் | New Research Center To Detect Cyber Attacks Early

அரச அமைப்புகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, உளவுத்தகவல் அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் அச்சுறுத்தல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், தாக்குதலாளர்கள் அமைப்புகளுக்குள் நீண்டகாலம் நிலைத்திருப்பதைத் தடுப்பது மற்றும் பெரியளவிலான சைபர் தாக்குதல்கள் உருவாகுமுன் அவற்றை முறியடித்தல் ஆகியவை இந்த ஆய்வு மையத்தின் பிரதான நோக்கங்களாகும்.

MATH Lab, 250-க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், சுகாதாரம், கல்வி, எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ஒருங்கிணைந்த, உளவுத்தகவல் சார்ந்த தேசிய சைபர் பாதுகாப்பு அணுகுமுறையை உருவாக்குவதற்கும் பங்களிக்கவுள்ளது.

மேலும், மால்வேர் பகுப்பாய்வு மற்றும் சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் துறைகளில் உள்நாட்டு நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், சிக்கலான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதில் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, இலங்கையின் சுயாதீன சைபர் திறன்களை வலுப்படுத்தும் என்றும் இலங்கை CERT தெரிவித்துள்ளது.

நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், அரசின் டிஜிட்டல் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்குமான நீண்டகால முதலீடாக இந்த ஆய்வு மையம் அமையும் எனவும், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசின் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை CERT குறிப்பிட்டுள்ளது.

கண்டியில் 20 அடி மண்மேடு சரிந்து தொழிலாளி படுகாயம்

கண்டியில் 20 அடி மண்மேடு சரிந்து தொழிலாளி படுகாயம்

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US