ஷெல்' எரிபொருள் நிறுவனம் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்கள்
ஷெல் இன்டர்நேஷனல் கம்பனி மற்றும் ஆர்எம் பார்க் கம்பனி லிமிடெட் இணைந்து இலங்கையின் எரிபொருள் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்துள்ளன.
இதன்படி ஷெல் நிறுவனம் இலங்கையில் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களை இவ்வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நிறுவனத்தின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், ஷெல் தனது புதிய எரிபொருள் வர்த்தக நிலையங்களை 2024 மூன்றாம் காலாண்டில் திறக்க எதிர்பார்க்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 60 வருடங்களின் பின்னர் Shell தனது வர்த்தக நாமத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளது.