எரிபொருள் கொள்முதலில் புதிய சிக்கல் குறித்து அவசர நடவடிக்கை

Fuel Price In Sri Lanka Sri Lanka Lanka IOC Crude Oil
By Sahana Mar 28, 2026 10:21 PM GMT
Report

இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட திறந்த கோரிக்கைக்கு, சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பகல் நேரத்தில் நடந்த பயங்கரம் ; ஐஸ்கிரீம் வியாபாரி தலையை துண்டித்து வீட்டிற்கு கொண்டு சென்ற நபர்

பகல் நேரத்தில் நடந்த பயங்கரம் ; ஐஸ்கிரீம் வியாபாரி தலையை துண்டித்து வீட்டிற்கு கொண்டு சென்ற நபர்

கிடைக்கப்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவை '24/7' அடிப்படையில் (நேரம் பாராது) இயங்கி வருவதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நம்பகமான விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வது பெரும் சவாலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் கொள்முதலில் புதிய சிக்கல் குறித்து அவசர நடவடிக்கை | New Problem In Fuel Procurement Urgent Action

மசகு எண்ணெய் மற்றும் டீசல் விநியோகத்திற்காக ஏற்கனவே இரண்டு முகவர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், இறுதி உடன்படிக்கையில் கையெழுத்திடும் தருணத்தில் அவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

தற்போதைய உலகளாவிய சூழலில், கடலில் பயணிக்கும் எரிபொருள் தாங்கிக் கப்பல்களை அணுகி, அதிக விலை கொடுத்துக் கொள்வனவு செய்யும் ஒரு போட்டி நிலை உருவாகியுள்ளதால் இந்தத் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் நெருக்கடியைக் கையாளும் பொருட்டு, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு தனது வழமையான நடைமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

வாரத்திற்கு ஒருமுறை கூடிய இக்குழு, தற்போது தேவைப்படின் ஒரே நாளில் இரண்டு தடவைகள் கூடி அவசர முடிவுகளை எடுத்து வருகின்றது. தரம் மற்றும் கொடுப்பனவு விதிமுறைகளைச் சரிபார்த்த பின்னரே தொழில்நுட்பக் குழுவிற்கு முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

பெட்ரோல் மற்றும் டீசலைப் பெற்றுக்கொள்வதில் பெரிய சிக்கல்கள் இல்லை என்றாலும், மசகு எண்ணெய் விநியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை கூட்டுத்தாபனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த மார்ச் 26 மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வரவேண்டிய மசகு எண்ணெய் கப்பல்கள் வருகை தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் 'உலை' எண்ணெய் தயாரிப்பது பாதிக்கப்படலாம் என்பதால், மேலதிக டீசல் மற்றும் ஒரு தொகுதி 'உலை' எண்ணெயை நேரடியாகக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ஒரு டீசல் கப்பல் எரிபொருளை இறக்கியுள்ளதோடு, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கான ஒரு கப்பலும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கான 92 ரக பெட்ரோல் கப்பல் ஒன்றும் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பெண்ணை இழிவாக நடத்தினாரா பொலிஸார்? பரபரப்பு குற்றச்சாட்டு

யாழில் பெண்ணை இழிவாக நடத்தினாரா பொலிஸார்? பரபரப்பு குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US