இணையத்தைக் கலக்கிய பாடகி யோஹானி டி சில்வாவுக்கு கிடைத்த புதிய பதவி
பிரபல பாடகி யோஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெயரிட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக, இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிகதடவைகள் பார்க்கப்பட்ட மெனிகே மகேஹிதேபாடல், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவில் பலமில்லியன் மக்களின் இதயங்களைக்கவர்ந்துள்ளது.
இது,பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின்ஆழத்தை, பிரதிபலிக்கின்றது.
இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாசாரத்தூதுவராக யோஹானி டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.