சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாக இருப்பதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரீட்சை பெறுபேறுகளில் தாமதம்
நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால் பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இன்னும் ஓரிரு வாரங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தீவிர முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் 4 அல்லது 5 நாட்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.