சட்டவிரோத மின்சார கம்பியால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்
மாத்தறை வெலிகம, கம்மல்கொட பகுதியில் இருவருக்கு மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
வெலிகம, கொலேதண்ட பகுதியில் வசிக்கும் தந்தை மற்றும் மகனுக்கே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் 66 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளதோடு, மின்சாரம் தாக்கியதில் 22 வயதுடைய மகன் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது மகனுடன் நேற்று (14) இரவு மாடுகளைக் கட்டுவதற்காகச் சென்றிருந்த போது, அருகிலுள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மின்சாரக் கம்பியை அமைத்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.