கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை தொடர்பில் புதிய அ றிவிப்பு!
எதிர்வரும் சனிக்கிழமை (15) அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லலாம்
அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதையிலான போக்குவரத்து கடந்த ஜனவரி மாதம் வீதி புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது.
இந்திய கடன் உதவியின் கீழ் 62 கிலோ மீற்றர் தூரம் சீர்செய்யப்பட்டு 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இந்தப் பாதை மூலம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில்களுக்கான ஆசன முன்பதிவு சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.