இவர்கள் மட்டுமே வெளிநாடு செல்லலாம்; பிரிட்டனில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!
பிரிட்டனில் இன்னும் சில நாட்களில், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் 40 வயதுக்கு அதிகமானவர்கள் பூஸ்டர் எடுத்திருக்க வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அதனை நடை முறைப்படுத்துவது தொடர்பாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson)தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
சிலர் முதல் ஊசி எடுத்த பின்னர் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை 2ம் ஊசி எடுத்த நபர்களுக்கு கூட ரத்தக் கட்டிகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பலர் பூஸ்டர் என்று அழைக்கப்படும் 3வது ஊசியை தவிர்த்து வரும் நிலையில், பூஸ்டர் ஊசி எடுக்காதவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற சட்டத்தை அங்கு கொண்டுவருவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.