எரிவாயு தட்டுப்பாட்டால் இளைஞர்களுக்கு கிடைத்துள்ள புதிய தொழில்
எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்களின் சிலிண்டர்களை பாதுக்காக்க இளஞர்கள் முன்வந்துள்ளதுடன் அதற்காக அவர் ஒருதொகை பெணத்தை பொதுமக்களிடம் பெற்றுக்கொள்கின்றனர்.
அதன்படி இரவு நேரங்களில் ஒரு சிலிண்டரை பாதுகாக்க 100 முதல் 500 ரூபாய் வரை இளைஞர்கள் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் நேற்றும் எரிவாயு விநியோகிக்கப்படாமையால் மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மிகப்பெரிய எரிவாயு வரிசை
நாட்டினுள் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த 4 மாதங்களினுள் மிகப்பெரிய எரிவாயு வரிசைகளை நேற்று நாடு முழுவதும் காண முடிந்துள்ளது.
நீண்ட நாட்களாக காத்திருக்கும் மக்கள் பல பிரதேசங்களில் சிலிண்டர்களை ஒன்றாக தொடர்புப்படுத்தி வாடகைக்கு பாதுகாக்கும் முறை ஒன்றையும் காண முடிகின்றது.
இரவு நேரங்களில் ஒரு சிலிண்டரை பாதுகாக்க 100 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இளைஞர்களுக்கு கிடைத்த புதிய தொழில் வாய்ப்பு இதன் ஊடாக வரிசையில் நிற்பதற்கும் கட்டணம் அறவிடும் புதிய தொழில் ஒன்றை இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் லிட்ரோ நிறுவனம் நேற்று வரையில் தொடர்ந்து ஒன்பது நாட்களாக எரிவாயுவை வழங்கவில்லை.
இந்த 9 நாட்களும் மக்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் சில பிரதேசங்களில் பல நாட்களாக மக்கள் வீடுகளுக்கு செல்லாமல் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.