வருவீங்கல்ல...? வைரலாகும் அழைப்பிதழ்!
இணையத்தில் புதுமனை புகுவிழா அழைப்பிதல் ஒன்று படு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நம் வீட்டில் இருக்கும் முதியவர்கள் எல்லாம் கல்யாணத்தை பண்ணி பார்...வீட்டை கட்டிப்பார் என முதுமொழி ஒன்றை கூறுவார்கள்.
தற்போதைய சூழலில் கல்யாணத்தை கூட பண்ணி முடித்துவிடலாம் . ஆனால் சொந்த வீட்டை கட்டுவது என்பது எளிதான கரியம் ஒன்றும் இல்லை. இந்த நிலையில் புதுமனை அழைப்பிதழ் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பால் காய்ச்சப் போறோம்...வருவீங்கல்ல...?
அந்த அழைப்பிதழில் “பால் காய்ச்சப் போறோம்”... அன்புள்ள உங்களுக்கு, கல்யாணத்தை பண்ணிப் பாருங்க....வீட்டைக் கட்டிப் பாருங்கன்னு சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிட்டோம், இப்போ வீட்டையும் கட்டிட்டோம்....
ரொம்ப ஆசைப்பட்டு அரக்கோணம், சுவால்பேட்டை, மேட்டுத் தெரு, மனை எண்.13ல் எங்களால் கட்டப்பட்ட அன்பு குடில் “புதுமனை புகுவிழா” 04-12-2022 -ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் நடக்கப் போகுது...எல்லாரும் வந்திடுங்க...
விடியற்காலை வரமுடியாது என்பதற்காக விடிஞ்சதுக்கு அப்புறமாதா வச்சிருக்கோம், வந்து எங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துக்க ஆசையுடன் அழைக்கிறோம், உங்களை வரவேற்க வாசலில் நானும், என் மனைவியும், எங்கள் பிள்ளைகளுடன் காத்திருக்கிறோம்....வருவீங்கல்ல...? என அச்சிடப்பட்டுள்ள நிலையில் குறித்த அழைப்பிதழ் வைரலாகி வருகின்றது.
அதேவேளை காமராஜன் - இந்துமதி தம்பதியினர். காமராஜன் சிறைத்துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.